அமேதி: உத்தரபிரதேச மாநிலம் அமேதி எம்பி தொகுதியில் 2014ஆம் ஆண்டு போட்டியிட்ட ஸ்மிருதி இரானி தோல்வி அடைந்தார். அதை தொடர்ந்து 2019ல் மீண்டும் போட்டியிட்டு ராகுல்காந்தியை வீழ்த்தினார். ஆனால் 2024 மக்களவை தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் கிஷோரி லால் சர்மாவிடம் ஸ்மிருதி இரானி தோல்வி அடைந்தார்.
தற்போது உபியில் நடந்து முடிந்த எஸ்ஐஆர் பணிக்கு பிறகு முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் பெயர், அமேதி தொகுதி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமேதி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட கவுரிகஞ்ச் தொகுதியில் உள்ள மேடன் மவாய் கிராமத்தில் அவர் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த கிராமத்தில் தான் ஸ்மிருதி இரானியின் வீடு உள்ளது.
