×

மின்சார ஸ்கூட்டரில் திடீர் தீ

பல்லடம், ஜன. 8: பல்லடத்தை சேர்ந்தவர் மதுமிதா (30). இவர், மங்கலம் ரோட்டில் காய்கறி கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர், விற்பனை முடிந்து கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு செல்ல தயாரானார். அப்போது கடை அருகே சார்ஜ் போடப்பட்டிருந்த அவரது மின்சார ஸ்கூட்டரின் பேட்டரி திடீரென புகைந்து தீப்பிடித்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், இதுகுறித்து பல்லடம் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து ஸ்கூட்டரில் பற்றிய தீயை அணைத்தனர். இதற்குள் பேட்டரி மற்றும் ஸ்கூட்டரின் உள்பாகங்கள் தீயில் எரிந்து சேதமானது.  அதிர்ஷ்டவசமாக பேட்டரி வெடிக்காததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து, பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags : Palladam ,Madhumita ,Mangalam Road ,
× RELATED அடிப்படை வசதிகள் செய்து தரும்படி சப்.கலெக்டரிடம் கோரிக்கை