கொழும்பு: இலங்கை நுவரெலியா கிரகரி ஏரியில், Amphibious aircraft எனப்படும் கடல் விமானம் இறங்கும்போது விபத்துக்குள்ளானது. ஏரி நீரில் கடல் விமானம் இறங்கும்போது, பலத்த காற்று வீசியதால் விமானம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான கடல் விமானத்தின் 2 விமானிகள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
