- வண்டியூர் கன்மய்
- மதுரை
- மதுரை மாவட்ட நீர்வளத்துறை
- பெரியார்-வைகை படுகைப் பிரிவு
- குண்டாரு படுகைப் பிரிவு
- பெரியார் பிரதான கால்வாய் பிரிவு
மதுரை, ஜன. 7: மதுரை மாவட்ட நீர்வளத்துறையின் கீழ் பெரியாறு – வைகை வடிநிலக்கோட்டம், குண்டாறு வடிநிலக் கோட்டம், பெரியாறு பிரதான கால்வாய் கோட்டம் என, மூன்று முக்கிய கோட்டங்களின் கீழ் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்மாய்கள் பராமரிக்கப்படுகின்றன. இவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகள், துறை அதிகாரிகளாலும், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலும் அவ்வப்போது அகற்றப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பெரியாறு பிரதான கால்வாய் கோட்டத்திற்கு உட்பட்ட வண்டியூர் கண்மாயிலிருந்து உபரி நீர் வெளியேறு கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டிருந்தது. இதன்படி, பெரியாறு பிரதான கால்வாய் கோட்ட உபகோட்டம் எண்:1ன் உதவி செயற்பொறியாளர் குணசேகரன், உதவி பொறியாளர் ஹரிஹரசுதன் தலைமையிலான அதிகாரிகள் கால்வாயிலிருந்த ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றினர்.
