- மன்னார்குடி
- லோகநாதன்
- வேகக்கொல்லை
- பண்ருட்டி
- கடலூர் மாவட்டம்
- மன்னார்குடி பெருந்தலைவர் காமராஜ்
- கும்பகோணம்…
மன்னார்குடி, ஜன.7: கடலூர் மாவட்டம் பண்ரூட்டி அடுத்த வேகாக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன் (48). முந்திரி வியாபாரி. இவர் ஊருக்கு செல்வதற்காக மன்னார்குடி பெருந்தலைவர் காமராஜர் பேருந்து நிலையத்திற்கு நேற்று முன்தினம் மாலை வந்தார். பின்னர், கும்பகோணம் செல்லும் அரசு பஸ்சில் ஏறி உட்கார்ந்திருந்தார்.
அப்போது அவரிடம் இருந்த விலை உயர்ந்த ஆண்ட்ராய்ட் செல்போனை போதை ஆசாமி ஒருவர் திருட முயன்றார். அவரை கையும் களவுமாக லோகநாதனும், சக பயணிகளும் பிடித்தனர். பிடிபட்ட அவரை பேருந்து நிலையத்தில் உள்ள புறக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்திய போது தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அடுத்த சிவக்கொல்லை பகுதியை சேர்ந்த ரமேஷ் (45) என்று தெரிய வந்தது.
இதையடுத்து, டவுன் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணன், எஸ்ஐ பாலச்சந்தர் ஆகியோர் வழக்கு பதிந்து ரமேசை கைது செய்து மன்னார்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதி உத்தரவின் பேரில் கிளைச் சிறையில் அடைத்தனர்.
