- எங்களுக்கு
- அதிபர் டிரம்ப்
- நீடாமங்கலம்
- நீடாமங்கலம் ஒன்றிய மார்க்சிஸ்ட் கட்சி
- அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
- ஜனாதிபதி
- நிக்கோலா மடுரோ
நீடாமங்கலம்,ஜன.7: நீடாமங்கலத்தில் அமெரிக்க அதிபர் டிரம்மின் உருவபடம் தீயிட்டு எரிக்கப்பட்டது.
நீடாமங்கலம் ஒன்றியம் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் வெனிசுலா நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ அவரது மனைவி இருவரையும் கைது செய்த ஏகாதிபத்திய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை கண்டித்தும் உடனே விடுதலை செய்ய வழியுறுத்தி டிரம்பின் உருவபடத்தை எரித்து போராட்டம் நடத்தினர்.
போராட்டம் ஒன்றிய செயலாளர் ஜான்கென்னடி தலைமையில் நடைபெற்றது. செயற்குழு ராதா, ஒன்றிய குழு உறுப்பினர்கள் ராஜா, ஞானசேகரன், கிளை செயலாளர் செல்வராஜ், தங்கராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டு டிரம்பை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
