×

தஞ்சையில் ஸ்டவ் வெடித்து வியாபாரி பலி

தஞ்சாவூர், ஜன.7: தஞ்சையில் ஸ்டவ் வெடித்ததில் தீக்காயமடைந்த வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார். தஞ்சை கீழவாசல் சாவடிக்கார தெருவை சேர்ந்தவர் கணேசன் (48). டீ வியாபாரி. இவர் கடந்த 4ம் தேதி வீட்டில் மண்ணெண்ணெய் ஸ்டவ் அடுப்பு பற்ற வைத்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஸ்டவ் வெடித்ததில் கணேசன் உடல் முழுவதும் தீ பரவியது. வலியால் அலறி துடித்த கணேசன் பலத்த தீக்காயமடைந்தார்.

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கணேசன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கணேசனின் மனைவி கமலா தஞ்சை கிழக்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags : Thanjavur ,Ganesan ,Chavadikkara Street, Keelavasal, Thanjavur ,
× RELATED சத்துணவு மையங்களில் கலவை சாதம்...