- பாண்டிச்சேரி
- நாகப்பட்டினம்
- சிறப்பு பணிக்குழு
- காரைக்கால்
- புதுச்சேரி
- சப்-இன்ஸ்பெக்டர்
- அக்பர் அலி
- வேளாங்கண்ணி
நாகப்பட்டினம், ஜன. 7: புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து நாகப்பட்டினத்திற்கு மதுபானங்கள் கடத்தப்படுவதாக தனிப்படை பிரிவு போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து வேளாங்கண்ணி அருகே சப் இன்ஸ்பெக்டர் அக்பர்அலி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனங்கள் மூன்றை தடுத்து நிறுத்தி உள்ளனர். போலீசாரை கண்டதும் ஒருவர் வாகனத்தை விட்டு விட்டு தப்பி ஓடி உள்ளார்.
சிக்கிய 2 பேரிடம் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.இதில் அவர்கள் வேளாங்கண்ணியை சேர்ந்த வேலு(30), கிருபாநிதி(34) என்பது தெரியவந்தது. இவர்களிடம் நடத்திய விசாரணையில் புதுச்சேரி மாநில சாராய பாட்டில்களை நாகப்பட்டினத்திற்கு கடத்தி வந்தது தெரியவந்தது. இரண்டு பேரை கைது செய்து ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள புதுச்சேரி மாநில மதுபானம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 3 இரண்டு சக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
