×

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் வழியாக தரிசிக்க நாளை கடைசி நாள்: 9ம் தேதி முதல் சர்வ தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையானை சொர்க்கவாசல் வழியாக சென்று தரிசிக்க நாளையுடன் கடைசி நாளாகும். வரும் 9ம் தேதி முதல் சர்வ தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்றுமுன்தினம் 82,650 பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தனர். இன்று காலை வைகுண்டம் கியூ காம்பளக்சில் உள்ள 31 அறைகளில் பக்தர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் ஏழுமலையானை தரிசிக்க சுமார் 13 மணி நேரம் ஆகும் என தெரிகிறது. ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர். இதற்கிடையில் வைகுண்ட ஏகாதசியொட்டி கடந்த 30ம்தேதி முதல் சொர்க்கவாசல் வழியாக சென்று பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர். இவ்வாறு சொர்க்கவாசல் வழியாக வரும் 8ம்தேதி (நாளை) வரை சுவாமியை தரிசிக்க வாய்ப்பு உள்ளது.

இதனால் திருமலை முழுவதும் அதிகளவு பக்தர்கள் திரண்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் கோயில் சார்பில் பால், குடிநீர் மற்றும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து 9ம் தேதி முதல் சர்வதரிசனம் செய்வதற்கான டோக்கன்கள் நாளை மதியம் கிடைக்கும் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Tirupati Ezhumalaiyan ,Tirumala ,Tirupati ,Ezhumalaiyan ,
× RELATED தேர்தலுக்கு முன் ஒன்றிய அரசை...