×

தோல்வி பயத்தில் எடப்பாடி: வீரபாண்டியன் பேட்டி

 

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் இன்று அளித்த பேட்டி: ஒடிசாவில் அமித்ஷா பேசும்போது தமிழர்களை திருடர் என்றார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக உரிமைக்காக போராடுகிறார். சட்டமன்ற தேர்தலில் போட்டியிட கூடுதல் இடம் கேட்கும் தார்மீகம் எங்களுக்கு உண்டு. இது ஜனநாயக உரிமை. தமிழக முதல்வர் தவறாக நினைக்க மாட்டார். ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம். பாஜ வெற்றி பெறும் இடங்களில் ஜனநாயகம் இல்லை. திமுக தோல்வி பயத்தில் இல்லை.

எடப்பாடி தான் தோல்வி பயத்தில் உள்ளார். மாநில அரசுக்கு ஒன்றிய அரசு தர வேண்டிய நிதியை தந்தால் மக்களுக்கு இன்னும் அதிகமாக முதல்வர் வழங்குவார். இது தான் மக்களுக்கான அரசு. தமிழகத்துக்கு 1,000 முறை பிரதமர் மோடி, அமித்ஷா வந்தாலும் திமுக கூட்டணியை பாதிக்காது. தமிழ் கலாசாரத்தை கெடுக்க பாஜ முயற்சிப்பதை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள். பாஜ, அதிமுக கூட்டணியை தோற்கடிக்க முடிவு செய்துள்ளோம். தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி வெல்லும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Veerapandian ,Secretary of State ,Weerabandian ,Mayiladudhara ,Amitsha ,Odisha ,Principal ,M.U. K. Stalin ,Tamil Nadu ,
× RELATED 56 தொகுதிகள், 3 அமைச்சர் பதவி கேட்கும்...