×

சொத்துகளை விற்றாவது படிக்க வைக்கும் மாநிலம்: நடிகர் கார்த்தி

 

நடிகர் கார்த்தி பேசியதாவது: நான் சினிமாவுக்கு வருகிறேன் என்று எனது அப்பாவிடம் சொன்னபோது, சினிமா என்பது ஒரு நிலையில்லா தொழில். நீ நன்றாக படி. அதன்பிறகு எது உனக்கு கை கொடுக்கிறதோ இல்லையோ அந்த படிப்பு உனக்கு கை கொடுக்கும் என்றார். அதன்பிறகு இன்ஜினியர் படித்தேன். அதன்பிறகு மாஸ்டர்ஸ் படித்தேன். அதற்கு பிறகு சினிமாவுக்கு வந்துவிட்டேன். அது வேறு விஷயம். ஆனால் கல்வி என்பது வெறும் மார்க் வாங்குவது, டிகிரி வாங்குவது என்பது அல்ல. இன்ஜினியர் படித்து முடித்தபோது கூட எனக்கு என்ன பண்றதுன்னு எனக்கு தெரியவில்லை. ஒவ்வொரு வருஷமும் நாம் கற்றுக்கொண்டு இருக்க வேண்டும். நாம் நினைக்கிற மாதிரி எதுவும் நடக்காது. ஒரு பிரேக் ஒயர் கட்டான மாதிரிதான். அதை சமாளிப்பது சாதாரண விஷயம் அல்ல. அதை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதை கல்விதான் நமக்கு சொல்லி கொடுக்கிறது. தைரியமாக கல்வியை பிடித்துக்கொண்டால் வாழ்க்கை முழுவதும் பயமே இருக்காது. நான் அமெரிக்கா சென்று படித்தபோது, அரசு பள்ளியில் படித்தவர்கள்தான் அதிகம் பேர் வந்திருந்தனர்.

அப்போது அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இன்றைக்கு அது ஆச்சரியமாக இல்லை. எங்கிருந்து ஆரம்பிக்கிறோம் என்பது முக்கியமில்லை. கல்வியை பிடித்துக்கொண்டால் எங்கள் வாழ்க்கையே, சமூகமே மாறிவிடும் என்பதை எங்கள் கண் முன்னால் பார்த்துக்கொண்டே இருக்கிறோம். சொத்துகளை விற்றாவது படிக்க வைக்க வேண்டும் என கல்விக்கு முக்கியத்துவம் தரும் மாநிலம் தமிழ்நாடு. இப்போது ஏஐ வளர்ந்து கொண்டு வரும் காலக்கட்டத்தில், மாணவர்களாக உங்களுக்கு அரசு கணினி வழங்குவது ஒரு முக்கியமானதாக நினைக்கிறேன். இதை நீங்கள் எவ்வளவு சரியாக பயன்படுத்தினால் அனைத்தையும் மாற்றிவிடும். பில்கேட்ஸ் மாணவனாக இருக்கும்போது கம்ப்யூட்டர் அவரை முக்கியமான நபராக மாற்றிக் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் உங்களுக்கு அரசு கொடுத்திருக்கிற லேப்டாப் இந்த சமயத்தில் கிடைப்பது ஒரு முக்கியமான தருணம் ஆகும். இதை ஏற்படுத்திக்கொடுத்த அரசுக்கு நன்றி.

 

Tags : Karthi ,
× RELATED ரூ.36.6 கோடியில் புதிய கட்டிடங்களை...