×

விளையாட்டு பயிற்றுநர் பணியிடம் விண்ணப்பிக்க இணையதளம்: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்

 

சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வில்வித்தை, தடகளம், பூப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கனோயிங் மற்றும் கயாகிங், சைக்கிளிங், வாள்சண்டை, கால்பந்து, ஜிம்னாஸ்டிக்ஸ், வளைகோல்பந்து, ஜுடோ, கபடி, நீச்சல், நீச்சல் டைவிங், மேசைப்பந்து, டேக்வாண்டோ, டென்னிஸ், கையுந்துபந்து, பளுதூக்குதல் ஆகிய விளையாட்டுகளுக்கான பயிற்றுநர் பணியிடங்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பயிற்றுநர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை பெறுவதற்கான இணையதள விண்ணப்ப பயன்பாட்டை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று துவங்கி வைத்தார்.

இந்நிகழ்வில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை செயலாளர் சத்யபிரத சாகு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் மேகநாத ரெட்டி மற்றும் அரசு அலுவலர்கள் உடனி
ருந்தனர். இப்பயிற்றுநர் பணிகளுக்கான கல்வி தகுதி, அனுபவம், விண்ணப்பிக்கும் முறை மற்றும் ஏனைய விவரங்கள் https://www.sdat.tn.gov.in/ என்ற இணையதளத்தில் உள்ளது. உரிய தகுதி மற்றும் அனுபவம் உள்ள பயிற்றுநர்கள் அதில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை அறிந்து இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

 

Tags : Minister ,Chennai ,Tamil Nadu Sports Development Authority ,
× RELATED பதுக்கல் வியாபாரிகளால் குமரியில்...