×

மாயமான மூதாட்டி சடலமாக மீட்பு

கள்ளிக்குடி, ஜன. 6: கள்ளிக்குடி அருகே கண்டியதேவன்பட்டி பகுதியில் உள்ள கிணற்றில் ஒரு பெண்ணின் சடலம் மிதப்பதாக வில்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அந்த உடலை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்த விசாரணையில் இறந்து கிடந்த மூதாட்டி கொல்லவீரம்பட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி கற்பகவள்ளி (64). என்பதும், கடந்த சில நாட்களுக்கு முன் இவர் வீட்டில் இருந்து மாயமானதும் தெரியவந்தது. இவரது மரணம் குறித்து விலலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Kallikudi ,Villur ,Kandiyadevanpatti ,Madurai Government Hospital ,
× RELATED கூரை வீட்டில் திடீர் தீ