விருதுநகர், ஜன. 6: குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7500 வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியம் சங்கத்தினர் விருதுநகர் கலெக்டர் அலுவலகம் வளாகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சரஸ்வதி தலைமை வகித்தார். இதில் தேர்தல் வாக்குறுதிப்படி குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7500 வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் மருத்துவப்படி ரூ.300, பண்டிகை முன் பணம் ரூ.6 ஆயிரம், குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் என முழக்கமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.
