தொண்டி, ஜன.6: தொண்டி மற்றும் சுற்றுவட்டார அரசு பள்ளிகளில் மூன்றாம் பருவ பாடப்புத்தகம் வழங்கப்பட்டது. இரண்டாம் பருவ விடுமுறை முடிந்து நேற்று அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளி திறந்த முதல் நாளான நேற்று தொண்டி கிழக்கு துவக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியர் லியோ ஜெரால்டு எமர்சன் அனைத்து மாணவ,மாணவிகளுக்கும் முன்றாம் பருவ பாட புத்தகம் வழங்கினார். பள்ளி மேலாண்மை குழு தலைவி காளீஸ்வரி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவி பானு உட்பட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
