போடி, ஜன.5: போடி பகுதியில் தற்போது ஏராளமான தற்காலிக கடைகள் சாலைகளின் ஓரங்களில் அமைக்கப்பட்டுள்ளன. பழங்கள், காய்கறிகள் போன்றவற்றிற்காக அமைக்கப்பட்டுள்ள இக்கடைகளில் வாங்கப்படும் பொருட்களின் எடை சரியான அளவில் இருப்பதில்லை என்று வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சாலையோர தள்ளுவண்டிகள் மற்றும் வாகனங்களில் வைத்து விற்பனை செய்யப்படும் கடைகளில் உரிய ஆய்வு மேற்கொண்ட சரியான எடை மற்றும் விலைகளில் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

