- போடி
- எஸ்ஐ விஜய்
- போடி தாலுகா காவல் நிலையம்
- மேலச்சோக்கநாதபுரம்
- மீனாட்சிபுரம் ஊராட்சி
- மீனாட்சிபுரம் கண்டியம்மன் கோவில் தெரு, மீனாட்சிபுரம்
- மீனா
போடி, ஜன.5: போடி தாலுகா காவல் நிலைய எஸ்ஐ விஜய் தலைமையிலான போலீசார் மேலசொக்கநாதபுரம், மீனாட்சிபுரம் பேரூராட்சி பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது மீனா விலக்கு மேலசொக்கநாதபுரம் பகுதியில் புது பைபாஸ் பாலம் அருகே மீனாட்சிபுரம் கண்டியம்மன் கோயில் தெருவை சேர்ந்த செல்வராஜ் (63), விநாயகர் கோயில் தெரு சண்முகம் (65), ஸ்ரீ ரெங்கன் தெரு பொன்ராகுல் (75), பெருமாள் கோயில் தெரு முருகன் (63) ஆகியோர் பணம் சூதாடியது தெரியவந்தது. இதையடுத்து இவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
