- ஸ்டாலின்
- உடல்நலம் காக்கும் மருத்துவ முகாம்
- Arur
- சுகாதார சேமிப்பு பல்துறை உயர் சிறப்பு மருத்துவ முகாம்
- சோலைக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி
- செட்டிக்கரை பஞ்சாயத்து
- தர்மபுரி யூனியன்
- தர்மபுரி மேற்கு மாவட்டம்
- திமுக
- முன்னாள்
- அமைச்சர்
- பழனியப்பன்…
அரூர், ஜன.5: தர்மபுரி மேற்கு மாவட்டம், தர்மபுரி ஒன்றியம் செட்டிக்கரை ஊராட்சி சோலைக்கொட்டாய் அரசு மேல்நிலைப்பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் பல்துறை உயர் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதனை தர்மபுரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் தொடங்கி வைத்து ஆய்வு செய்தார்.
மேலும், பயனாளிகளுக்கு மருத்துவ உபகரணங்கள் மற்றும் முகாமில் பணியாற்றிய ஊழியர்களுக்கு உணவு, தண்ணீர் வழங்கினார். நிகழ்ச்சியில், தர்மபுரி வடக்கு ஒன்றிய செயலாளர் மாது, மாவட்ட இலக்கிய அணி தலைவர் சோலை முனியப்பன், மாவட்ட விவசாய தொழிலாளரணி துணை அமைப்பாளர் ராஜா, மாவட்ட ஆதி திராவிடர் துணை அமைப்பாளர் சரவணன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சிவா உள்ளிட்டோர் கலந்து
கொண்டனர்.
