- தாமிரபரணியாறு
- ராஜேந்திர சிங்
- நெல்லை
- நீதிமன்றம்
- ராஜஸ்தான்
- தாமிராபராணி நதி
- ராமயன்பட்டி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்
- சிந்தபுந்துரை
நெல்லை: தாமிரபரணி ஆற்றின் நிலையை ஆய்வு செய்ய ராஜஸ்தானைச் சேர்ந்த நீர் பாதுகாப்பு நிபுணர் ராஜேந்திரசிங்கை ஆணையராக ஐகோர்ட் கிளை நியமித்தது. நீதிமன்ற உத்தரவையடுத்து நேற்று நெல்லை வந்த அவர், ராமையன்பட்டி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், சிந்துபூந்துறை உள்ளிட்ட பகுதிகளில் தாமிரபரணி ஆற்றை நேரில் ஆய்வு செய்தார். கழிவு நீர் நேரடியாக கலக்கும் இடங்களை பார்வையிட்ட அவர், பொதுமக்களிடம் இதுகுறித்த விபரங்களை கேட்டறிந்தார்.
ஆய்வுக்குப் பின் அவர் அளித்த பேட்டி: நதி பாதுகாப்பு பணிகளை தொடர்ந்து கண்காணிக்க ஒரு பிரத்யேக ‘நோடல் அதிகாரி’ நியமிக்கப்பட வேண்டியது அவசியம். தாமிரபரணி நதி நீரை மீட்போம். குறைந்த மழைப் பொழிவு உள்ள ராஜஸ்தானிலேயே என்னால் 23 நதிகளை மீட்க முடிந்த போது, வற்றாத ஜீவ நதியான தாமிரபரணியை சீரமைப்பது மிகவும் எளிதான காரியம். இதற்கு நிர்வாகம், நீதித்துறை, மக்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அடுத்த 30 நாட்களுக்குள் எனது விரிவான பரிந்துரைகளை சமர்ப்பிப்பேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
