டெல்லி: வெனிசுலாவில் உள்ள இந்தியர்களுக்கு தேவையான உதவிகள் அனைத்தும் செய்து தரப்படும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் ‘வெனிசுலாவில் நடக்கும் நிகழ்வு கவலை அளிக்கிறது. சூழலை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.வெனிசுலா நாட்டு மக்களின் நலனுக்கு உறுதுணையாக இருப்போம். வெனிசுலா – அமெரிக்கா பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்’ எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
