×

வேலு நாச்சியார் 296வது பிறந்தநாள் மாலை அணிவித்து விஜய் மரியாதை

சென்னை: வீரமங்கை வேலு நாச்சியாரின் 296வது பிறந்தநாளையொட்டி நடிகரும், தவெக தலைவருமான விஜய், நேற்று வேலு நாச்சியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவர் வெளியிட்ட பதிவில், ‘விடுதலை போராட்டத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து ஆயுதம் ஏந்தி போராடி, தாய்மண்ணை மீட்ட முதல் இந்திய பெண் போராளி; சமூக சமய நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்த எழுச்சி கனல்; எங்கள் கொள்கை தலைவர் வீரமங்கை ராணி வேலு நாச்சியாரின் பிறந்தநாளையொட்டி, சென்னையில் கழகத்தின் தலைமை நிலைய செயலகத்திலுள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். தமிழ் மண்ணுக்கு பெருமை சேர்த்த வீரமங்கை ராணி வேலுநாச்சியார் வழியில், மக்கள் விரும்பும் மக்களாட்சியை அமைக்க உறுதியேற்போம்’ என்று தெரிவித்துள்ளார்.

Tags : Vijay ,Velu Nachiyar ,Chennai ,Veeramangai Velu Nachiyar ,Thaveka ,British ,
× RELATED பரபரப்பான அரசியல் சூழலில் எடப்பாடி பழனிசாமி திடீர் டெல்லி பயணம்