×

தொழிலாளியை தாக்கிய தம்பதி மீது வழக்கு

போடி, ஜன. 3: போடி அருகே மீனாட்சிபுரம் செல்லாண்டியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ராஜா(44). கூலித்தொழிலாளி. அதே தெருவை சேர்ந்தவர் மார்க்கண்டேயன். நேற்று அப்பகுதியில் ராஜா நடந்து சென்றபோது, மார்க்கண்டேயன், அவரது மனைவி முருகு (எ) முருகேஸ்வரி ஆகிய இருவரும் சேர்ந்து அவரை பட்டப்பெயரால் அழைத்து கிண்டல் செய்துள்ளனர். இதனை ராஜா கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மார்க்கண்டேயன் மற்றும் முருகேஸ்வரி ஆகியோர் அவரை ஆபாசமாக பேசியதுடன், அருகில் கிடந்த கட்டையால் சரமாரியாக தாக்கி கொலைமிரட்டல் விடுத்துள்ளனர். இதில் ராஜா காயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, போடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின்பேரில் மார்க்கண்டேயன், முருகு (எ) முருகேஸ்வரி ஆகியோர் மீது போடி தாலுகா காவல் நிலைய எஸ்ஐ விஜய் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

 

Tags : Bodi ,Raja ,Meenakshipuram Sellandiyamman Koil Street ,Markandeyan ,Murugu (a) Murugeswari… ,
× RELATED உரிமையாளர், 8 ஆடுகள் வாகனம் மோதி சாவு