நத்தம், ஜன. 3: நத்தம் அருகே மணக்காட்டூரில் தர்மசாஸ்தா ஐயப்பன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஜனவரி 1ம் தேதி, ஐயப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கி சபரிமலை யாத்திரையை துவங்குவர். அதன்படி அய்யனார் கோயில் தீர்த்தம் எடுத்து வந்து கிராம தெய்வங்களுக்கு கனி மாற்றுதல் நடந்தது. மறுநாள் தோரணம் கட்டுதலை தொடர்ந்து அதிகாலையில் இருமுடி கட்டுதல் நிகழ்ச்சியும், பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
பின்னர் தேர் பவனியை தொடர்ந்து ஐயப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் சபரிமலைக்கு புறப்பட்டு சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை குருசாமி தலைமையில் ஐயப்ப பக்தர்கள், கோயில் நிர்வாகிகள், கிராம மக்கள் செய்திருந்தனர்.
