நீடாமங்கலம், ஜன. 3: கொரடாச்சேரி அருகே பத்தூர் கிராமத்தில் திருச்சி வேளாண்மை கல்லூரி மாணவிகள் கிராம மதிப்பீடு செய்யும் பயிற்சியில் ஈடுபட்டனர். திருச்சி வேளாண்மை கல்லூரி மாணவிகள் நீடாமங்கலத்தில் அமைந்துள்ள கிருஷி விக்யான் கேந்திராவில் ஊரக வேளாண் பணிக்காக வந்துள்ளனர். அதில் கிராமப்புறங்களில் தங்கி பல்வேறு வேளாண் மற்றும் அதை சார்ந்த நிகழ்வுகள் மற்றும் செயல் திட்டங்கள் தொடர்பான பயிற்சியில் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர்.
மேலும் கொரடாச்சேரி கிராமத்தில் சமூக வரைபடம், கிராமத்தின் தரவரிசை, விவசாயியின் வகைப்பாடு, பயிர் ரகங்கள், பயிரிடும் முறை, விவசாயிகளின் அன்றாட வாழ்க்கை மற்றும் கிராம மக்களின் வருமானம், செலவு ஆகியவற்றை கிராம மக்கள் மற்றும் விவசாயிகளிடம் கேட்டறிந்து கிராம மதிப்பீடு செய்தனர்.
