பொன்னமராவதி,ஜன.3: பொன்னமராவதி அருகே காரையூரில் ஐயப்ப பக்தர்கள் இரு முடிகட்டி சபரிமலை பயணம் மேற்கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள காரையூரில் உள்ள பக்தர்கள் சபரிமலைக்கு கார்த்திகை மாதம் மாலை அணிந்து விரதம் இருந்து வந்தனர்.
இந்தநிலையில் ராஜா குருசாமி தலைமையில் காரையூர் தர்ம சாஸ்தா ஐயப்ப பக்தர்கள் சார்பில் காரையூர் சுந்தர்ராஜா பெருமாள் கோவிலில் ஐயப்ப சுவாமிக்கு பால், பழம், பன்னீர், குங்குமம், சந்தனம், நெய் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதையடுத்து அங்கு ஐயப்ப பக்தர்கள் ராஜா கோவிந்தன் குருசாமி தலைமையில் இருமுடி கட்டி சபரிமலை பயணம் மேற்கொண்டனர். முன்னதாக பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
