பட்டிவீரன்பட்டி அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

பட்டிவீரன்பட்டி, ஜன. 24: பட்டிவீரன்பட்டி அருகே நெல்லூரை சேர்ந்தவர் மலைச்சாமி (30). கூலித்தொழிலாளி. இவர் தனது உறவினர் வீட்டு விஷேசத்திற்காக மைக்செட் கட்டும் பணிக்கு சென்றார். தென்னை மரத்தில் ஏறி வயரை தூக்கி எறிந்த போது அது, அருகிலிருந்த உயரழுத்த மின்வயர் மீது உரசியதில் மலைச்சாமி மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த பட்டிவீரன்பட்டி போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வத்தலக்குண்டு ஜிஹெச்சிற்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த மலைச்சாமிக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>