- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தமிழர்கள்
- துணை ஜனாதிபதி
- ராதாகிருஷ்ணன்
- சென்னை
- கலைவனார் அரங்கம்
- முன்னாள் அமைச்சர்
- எச்.வி. ஹண்டே
- பாரத ரத்னா எம்ஜிஆர் அறக்கட்டளை
- மேலாண்மை
- ஏ.சி சண்முகம்
- மாநில மத்திய அமைச்சர்
- எல்.முருகன்
- தமிழ்நாடு…
சென்னை: துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பாராட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடந்தது. முன்னாள் அமைச்சர் எச்.வி.ஹண்டே தலைமை வகித்தார். பாரத ரத்னா எம்ஜிஆர் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஏ.சி.சண்முகம் முன்னிலை வகித்தார். ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் நீதிபதிகள் டி.என்.வள்ளிநாயகம், ஜோதிமணி, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் டி.ஆர்.பாரிவேந்தர், வேல்ஸ் பல்கலைக்கழகம் வேந்தர் ஐசரி கணேஷ், திரைப்பட இயக்குனர் பாக்யராஜ், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் சுதா சேஷையன், பிரபல இதய சிகிச்சை நிபுணர் சொக்கலிங்கம் ஆகியோர் பாராட்டி பேசினர்.
தொடர்ந்து, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: இந்திய கலாச்சாரத்தின் அடித்தளமாக இருப்பது தமிழகத்தின் கலாச்சாரம் தான். ஒட்டுமொத்த இந்திய கலாச்சாரத்தின் அடிப்படையே தமிழகம் தான். அதனால் பிரதமர் எங்கு சென்றாலும் தமிழின் பெருமையை, தமிழரின் பெருமையை உயர்த்தி பேசுகிறார். அடுத்த பிறவி ஒன்று இருந்தால் நான் தமிழகத்தில் பிறக்க விரும்புகிறேன் என்று காந்தி சொன்னார். அதைதான் மோடியும், தமிழ் மண்ணில் பிறக்க வேண்டும், தமிழனாக பிறக்க வேண்டும் என்று சொன்னார். எதனால் சாத்தியம் என்றால் தமிழர்களுக்கே இருக்கின்ற மகத்தான விருந்தோம்பல் தான், உழைக்கும்போது எதையும் எதிர்பார்க்காமல் இருந்தால் வெற்றி உங்களை தேடி வரும். கீதையை பின்பற்ற வேண்டும். சுதந்திரம் சும்மா கிடைக்கவில்லை. எல்லோருடைய உழைப்பும் அடங்கியுள்ளது. கருப்பாக இருந்தாலும், சிகப்பாக இருந்தாலும் ஒன்றை தெரிந்துகொள்ள வேண்டும். உழைத்தால் வெற்றி கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
