×

தூத்துக்குடி செயின்ட் மேரீஸ் காலனி பூங்காவில் இறகுப்பந்து மைதான பணிகள்

தூத்துக்குடி, ஜன. 3: தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிதாக தார் சாலை, பேவர்பிளாக் சாலை, பூங்காக்கள், படிப்பகங்கள், உடற்பயிற்சி கூடங்கள், புதிதாக மின்விளக்குகள், உயர்மின் கோபுரங்கள், நடைபயிற்சி பாதைகள், மழைநீர் வடிகால், பாதாள சாக்கடை உள்ளிட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதேபோல் தூத்துக்குடி செயின்ட் மேரீஸ் காலனி பகுதியில் உள்ள விடுதலைப் பூங்காவின் அருகில் உள்ள மாநகராட்சி இடத்தில் புதிதாக இறகுப்பந்து மைதானம், விளையாட்டு உபகாரணங்கள் அமைக்கும் பணிகள், சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் நடைபெற உள்ளது. இதனை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறுகையில், மாநகர மக்களின் சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு இடங்களில் உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. மாநகரில் பிளாஸ்டிக் கழிவுகளை கழிவுநீர் கால்வாய்களில் வீசுவதை தவிர்த்து, முறையாக மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களிடம் வழங்க வேண்டும். பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுப்புற சுகாதாரத்திற்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படுகிறது. இதனை உணர்ந்து பொதுமக்கள் தடை செய்யப்பட்ட பாலிதீன் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும், என்றார். ஆய்வின்போது மண்டல தலைவர் நிர்மல்ராஜ், திமுக வட்டச் செயலாளர் ரவீந்திரன், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags : Toothukudi ,St. ,Mary ,Colony Park ,Thoothukudi ,Paverblock Road ,Municipality ,
× RELATED உரிமையாளர், 8 ஆடுகள் வாகனம் மோதி சாவு