- தர்மபுரி
- தர்மபுரி மாவட்டம்
- பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி
- சின்னூர்
- செல்நய்கனூர்
- சக்கிலநாதம்
- கொடுபதி
- சின்னப்பநல்லூர்
தர்மபுரி, ஜன.3: தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முதுகம்பட்டி, சின்னூர், சீல்நாய்க்கனூர், சக்கில்நத்தம், கோடுபட்டி, சின்னப்பநல்லூர் ஆகிய பகுதிகளில் சிக்னல் குறைபாடுகள் காரணமாக வாடிக்கையாளர்களின் செல்போன்களுக்கு அழைப்புகள் மற்றும் இணையதளம் ஆகியவற்றை சரியாக பயன்படுத்த முடியாமல் இருந்து வருகின்றனர். மேலும் பண பரிவர்த்தனைகள், ஆன்லைன் கல்வி, அவரச அழைப்புகள் உள்ளிட்ட தேவைகளுக்கு பிறரை தொடர்பு கொள்ள முடியாமல் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இது குறித்து பென்னாகரம் முன்னாள் திமுக எம்எல்வும், முன்னாள் மாவட்ட பொறுப்பாளருமான இன்பசேகரன் பிஎஸ்என்எல் துணை பொதுமேலாளர் பிரபுதுரையிடம் செல்போன் டவர் சரிவர செயல்படாத, பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் புதிய செல்போன் டவர் அமைத்து தரவேண்டும் என கோரிக்கை மனு அளித்தார். இதற்கு பதிலளித்த துணை பொதுமேலாளர் கூறும் போது, வரும் நிதியாண்டில் செல்போன் டவர் புதிதாக அமைத்து தரப்படும். மேலும் தற்போது உள்ள ப்ரீக்வென்சியையும் தற்காலிகமாக மேம்படுத்தி வழங்கப்படும் என உறுதியளித்தார். அப்போது ரவி, முனியப்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.
