- ஆசிரியர் சங்கக் கூட்டம்
- பென்னாகரம்
- தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்
- பின்தங்கிய
- வகுப்புகள்
- நலத்துறை
- கார்டியன் ஆசிரியர் சங்க மாநில நிர்வாகி
- குழு
- Okenakkal
- மாநில தலைவர்
- பொன். கஜேந்திரன்
- மாநில அமைப்பு
- தமிழுமணி
- சிபிஎஸ்இ…
பென்னாகரம், ஜன.3: தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை காப்பாளர் ஆசிரியர் சங்க மாநில செயற்குழு கூட்டம், ஒகேனக்கல்லில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் பொன்.கஜேந்திரன் தலைமை வகித்தார். மாநில அமைப்பு செயலாளர் தமிழ்மணி வரவேற்றார். இக்கூட்டத்தில் புதிய சிபிஎஸ் பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்து, அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பட்டதாரி காப்பாளர்களுக்கு மாநில பணி மூப்பு அடிப்படையில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலராகவும், இடைநிலை காப்பாளர்களுக்கு அலுவலக கண்காணிப்பாளராக பதவி உயர்வு, கல்லூரி விடுதிகளுக்கு முதுகலை பட்டதாரி காப்பாளரை பி.ஜி அசிஸ்டன்ட் பணி அமைத்தல், அனைத்து விடுதிகளிலும் காலியாக உள்ள சமையலர் காப்பாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. மேலும், விடுதிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் பராமரிப்பு கட்டணத்தை ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்த வேண்டும். விடுதிகளுக்கு தேவையான கோதுமை, எண்ணெய், துவரம் பருப்பு, உளுந்து போன்ற உணவு பொருட்களை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சியில் மாநில பொதுச்செயலாளர் ரகுநாத், அரசு அலுவலக ஒன்றிய மாவட்ட தலைவர் குமார், மாவட்ட செயலாளர் நாகராஜ், சட்ட ஆலோசகர் ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளர் நாகராஜ் நன்றி கூறினார்.
