×

பல்லடத்தில் புறவழிச்சாலை பணி தீவிரம்

 

பல்லடம்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் செட்டிபாளையம் சாலையில் பணிக்கம்பட்டி பிரிவு முதல் பல்லடம்-தாராபுரம் சாலையில் ஆலூத்துபாளையம் பிரிவு வரை ரூ.54 கோடி மதிப்பில் 7.60 கி.மீ தூரத்திற்கு புதிய இணைப்பு சாலை அமைக்கும் பணி பல்லடம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தின் மேற்பார்வையில் கடந்த 2 மாதங்களாக துரிதமாக நடந்து வருகிறது. தற்போது இந்த இணைப்புச் சாலை பணி நீட்டிக்கப்பட்டு ஆலுத்துபாளையம் முதல் தேசிய நெடுஞ்சாலையின் அருகே அமைந்திருக்கும் மாதாப்பூர் சாலையில் இணையும் வகையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த இணைப்புச் சாலையின் தொடர்ச்சியாக பணிக்கம்பட்டியில் இருந்து பிரிந்து செம்மிபாளையம் பிரிவில் தேசிய நெடுஞ்சாலையில் இணையும் இதர மாவட்ட சாலையான வெங்கிடாபுரம் காளிபாளையம் சாலையை இரண்டு வழித்தடமாக மேம்படுத்தும் பணி நெடுஞ்சாலைத்துறை மூலம் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த மூன்று பணிகளும் முடியும் பொழுது கோயம்புத்தூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செம்பிபாளையம் பிரிவில் இருந்து மாதாப்பூர் வரை இணைப்பு சாலை செயல்படும் என நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.

Tags : Palladam ,Palladam, Tiruppur district ,Panikampatti section ,Chettipalayam ,Aloothupalayam ,Palladam-Tharapuram ,Palladam Highways Sub-Division… ,
× RELATED படுகர் இன மக்களின் குல தெய்வமான ஹெத்தை...