×

குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிப்பு

 

தென்காசி: குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் யாரும் குற்றால அருவிக்கு செல்ல முடியாதபடி கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குற்றால அருவிகளில் நேற்றிரவு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு சற்று குறைந்தாலும், அதிகளவில் தண்ணீர் விழுவதால் பாதுகாப்பு கருதி குளிக்க விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது. தென்காசி மாவட்டத்தில் நேற்று 2 இடங்களில் அதி கனமழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவசைலத்தில் 24 செ.மீ. மழை அயன் தர்மபுரம் மடத்தில் 20 செ.மீ. மழை பெய்துள்ளது

Tags : TENKASI ,
× RELATED கச்சதீவு அருகே மீன்பிடித்துக்...