சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல் காக்காவாடி அருகே பழனிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர் லாரி மோதி பலி

கரூர், ஜன. 24: கரூர் மதுரை பைபாஸ் சாலை காக்காவாடி அருகே பழனிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர் கண்டெய்னர் லாரி மோதி பலியானார். நாமக்கல் மாவட்டம் மோகனூரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன்(28). இவர், நேற்று அதிகாலை இந்த பகுதியை சேர்ந்த சிலருடன் பாதயாத்திரையாக பழனிநோக்கி புறப்பட்டார். கூடவே, உணவுப் பொட்டலங்கள் ஏற்றிச் சென்ற வேனும் இவர்களை பின்தொடர்ந்து சென்றது.நேற்று காலை 6மணியளவில் கரூர் மதுரை பைபாஸ் சாலை காக்காவாடி அருகே, வேனில் இருந்த உணவுப் பொட்டலங்களை மற்ற பக்தர்களுக்கு கார்த்திக்கேயன் மற்றும் உடன் வந்தவர்கள் வழங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, நாமக்கல் பகுதியில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற கண்டெய்னர் லாரி இவர்கள் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே இறந்தார். உடன் இருந்த இருவரும் இதில் காயமடைந்து கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.இந்த சம்பவம் குறித்து வெள்ளியணை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: