ஈரோடு, டிச. 31: ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட் பழைய காட்டூர் பகுதியில் பெருந்துறை போலீசார் நேற்று முன்தினம் கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் உள்ள பெட்டிக்கடை ஒன்றில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான பான்மசாலா, குட்கா உள்ளிட்டவை விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் கடை உரிமையாளரான பெருந்துறை, மேற்கு சாணார்பாளையம் பகுதியை சேர்ந்த ரமேஷ் (42) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 913 கிராம் எடையிலான புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
