×

நானும் அண்ணாமலையும் சேர்ந்து ஆடும் ஆட்டம் இனி தான் இருக்கு: வள்ளி கும்மி ஆடியபின் நயினார் தடாலடி

கோவை: ‘நானும் அண்ணாமலையும் சேர்ந்து ஆடும் ஆட்டம் இனி தான் இருக்கு’ என்று நயினார் நாகேந்திரன் பேசி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜ மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ என்ற பெயரில், மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது நடைபெற்ற வள்ளிக் கும்மி நடன நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை ஆகியோர் நடனக் கலைஞர்களுடன் இணைந்து வள்ளி கும்மி ஆடினர்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய நயினார் நாகேந்திரன் கூறியதாவது: வள்ளிக்கும்மி ஆட்டத்தில் பல்வேறு சூட்சமங்கள் இருக்கிறது என அண்ணாமலை வரும்போது சொன்னார். இது பாரம்பரிய நடனம். இந்த ராஜ கணபதி ஆட்டத்தை பார்த்ததும் எனக்கும் ஆட வேண்டுமென தோன்றியது. ஒரு நிமிடம் ஆடினேன். நானும், அண்ணாமலையும் ஆடினோம். ஆனால், நாங்கள் இருவரும் இன்னொரு ஆட்டம் ஆடப் போகிறோம். அந்த ஆட்டம் தேசிய ஜனநாயக கூட்டணியோடு சேர்ந்து, அமித்ஷா, மோடி என்ன நினைத்தார்களோ, என்ன நினைத்து இந்த கூட்டணியை உருவாக்கினார்களோ அதை வெற்றி பெற செய்வதற்கு நாங்கள் இருவரும் சேர்ந்து ஆடும் ஆட்டம் இனிமேல் தான் இருக்க போகிறது. என்னய்யா நீ மட்டும் தான் ஆடுவியா? எங்களுக்கு ஆட தெரியாதா? என பொள்ளாச்சி ஜெயராமன் நினைக்கிறார். ஏற்கனவே எஸ்.பி.வேலுமணி உடன் சேர்ந்து நீங்கள் ஆடிய ஆட்டத்தை பார்த்துள்ளோம். நீங்க வேறு எதையும் நினைத்துவிடக்கூடாது. இந்த மாதிரியான கும்மி ஆட்டம் தான். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Annamalai ,Nainar Thadaladi ,Coimbatore ,Nainar Nagendran ,BJP ,president ,
× RELATED சென்னை பல்கலை துணைவேந்தர் மசோதா...