×

தனியார் பள்ளி ஆசிரியை உள்பட 2 பெண்கள் மாயம்

சேலம், டிச.31: சேலம் அடுத்த வேடுகத்தாம்பட்டியைச் சேர்ந்தவர் கலையரசன். இவரது மனைவி மகேஸ்வரி (39). கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனிடையே கடந்த 26ம் தேதி வீட்டிலிருந்து வெளியே வந்த மகேஸ்வரி, அதன்பின்னர் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மகேஸ்வரியின் தாயார் செல்வி, கொண்டலாம்பட்டி போலீசில் புகார் அளித்தார். இதேபோல் அஸ்தம்பட்டியைச் சேர்ந்தவர் வேலு. இவரது மனைவி இந்திரகுமாரி (25). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். கணவன்-மனைவிக்குள் நடந்த தகராறு காரணமாக, இந்திரகுமாரி வீட்டிலிருந்து வெளியேறினார். பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து தந்தை அசோக்குமார், அஸ்தம்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Salem ,Kalaiyarasan ,Vedukathampatti ,Maheshwari ,
× RELATED பேருந்து நிறுத்த பகுதியை ஆக்கிரமித்த கடைக்காரர்கள்