×

நாங்குநேரி அருகே கழிவுகள் கொட்டிய லாரி சிறை பிடிப்பு

களக்காடு: நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே நம்பியாற்றின் கரையோரம் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டிய வெளி மாவட்டத்தில் இருந்து வந்த லாரியை பொதுமக்கள் சிறை பிடித்தனர். இது குறித்து நாங்குநேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே நான்கு வழிச்சாலையில் நம்பியாற்றின் கரையோரமாக பிளாஸ்டிக் கழிவுகளை லாரியில் கொண்டு வந்து மூட்டை மூட்டையாக கொட்டிக் கொண்டிருந்தனர். இது குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் லாரியை சிறை பிடித்து நாங்குநேரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் விரைந்து வந்த போலீசார் பிளாஸ்டிக் கழிவுகளை ஏற்றி வந்த லாரி டிரைவர் செல்வத்திடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே நம்பியாற்றின் கரையோரம் பட்டா இடங்களிலும் அரசு புறம்போக்கு இடங்களிலும் மர்ம நபர்கள் வெளி மாவட்டத்தில் இருந்து கொண்டு வரும் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டி எரித்து சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தி வருகிறார்கள். இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Nanguneri ,Nambiat ,Nella district ,
× RELATED பல்லடத்தில் புறவழிச்சாலை பணி தீவிரம்