×

சமூக வலைதளங்களில் வைரலாகும் திகில் வீடியோ; கோயிலாறு அணைப்பகுதியில் ராஜநாகம்: வனத்துறை ஊழியர்களுக்கு எச்சரிக்கை

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே கோயிலாறு அணைப்பகுதியில் ராஜநாகம் நடமாட்டம் இருப்பதாக தகவல் வெளியானதால், ஊழியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் அணைப்பகுதிக்கு சென்று வருமாறு வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் கோயிலாறு அணை அமைந்துள்ளது. 42 அடி உயரமுள்ள இந்த அணை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அணையின் நீர்மட்டம் தற்போது 21 அடியாக உள்ளது. கோயிலாறு அணைப்பகுதிக்கு பொதுமக்கள் செல்ல ஏற்கனவே வனத்துறை தடை விதித்துள்ளது.

இந்நிலையில் கோயிலாறு அணை நுழைவுவாயில் அருகே தடுப்புச்சுவர் ஓரத்தில் மிகப்பெரிய ராஜநாகம் ஒன்று சுருண்டு கிடக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் தற்போது ராஜநாகம் திரியும் காட்சி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், கோயிலாறு அணைப்பகுதியில் பணியாற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மிகவும் கவனமாக அணைப்பகுதிக்கு சென்று திரும்புமாறு வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags : Temple Dam ,Vadrairuppu ,Rajanagam ,dam ,Vathirairpu ,Vathirairupu, Virudhunagar district ,
× RELATED மெட்ரோ ரயில் திட்டம்: மேலகிரி என...