×

ராயபுரம் மண்டலத்தில் ரூ.1.26 கோடி மதிப்பீட்டில் 128 மின்விளக்கு கம்பங்கள்: உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை, டிச.30: சென்னை மாநகராட்சி, ராயபுரம் மண்டலம், 55வது வார்டுக்கு உட்பட்ட தாதா முத்தையப்பன் தெரு முதல், அம்மன் கோயில் தெரு வரை சாலையின் இருபுறமும் ரூ.28.15 லட்சம் மதிப்பீட்டில் 33 மின் விளக்கு கம்பங்கள், 56வது வார்டுக்கு உட்பட்ட அம்மன் கோயில் தெரு முதல், இப்ராஹிம் சாலை வரை சாலையின் இருபுறமும் ரூ.59.50 லட்சம் மதிப்பீட்டில் 58 மின் விளக்கு கம்பங்கள் மற்றும் 57வது வார்டுக்கு உட்பட்ட என்.எஸ்.சி.போஸ் சாலை முதல் தாதா முத்தையப்பன் தெரு வரை சாலையின் இருபுறமும் ரூ.38.21 லட்சம் மதிப்பீட்டில் 37 மின் விளக்கு கம்பங்கள் என 3 வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.1.26 கோடி மதிப்பீட்டில் 128 மின்விளக்கு கம்பங்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சி.சிவசங்கர், அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா, துணை ஆணையர்கள் வி.சிவகிருஷ்ணமூர்த்தி, கட்டா ரவி தேஜா, மண்டலக்குழுத் தலைவர் ராமுலு, மாமன்ற உறுப்பினர்கள் எல்.தாஹா நவீன், வெ.பரிமளம், ராஜேஷ் ஜெயின் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்ட
னர்.

Tags : Udayaniti Stalin ,Rayapuram Zone ,Chennai ,Chennai Municipality ,Dada Muthaiappan Street under 55th Ward ,Amman Temple Street ,Amman under 56th Ward ,Amman ,
× RELATED வேலை செய்த நிறுவனத்தில் ரூ.47 லட்சம்...