தேவையான பொருட்கள்
2 கப் கருணை கிழங்கு துண்டுகள், ஃப்ரோஜென் (frozen)
½ கப் உடைந்த பயத்தம் பருப்பு தோலுடன்
1கப் தக்காளி துண்டுகள்
தேக்கரண்டி புளி பேஸ்ட்
1 மேஜை கரண்டி நல்லெண்ணெய்
1 தேக்கரண்டி பெருஞ்சீரகம்
1 தேக்கரண்டி கடுகு
1 தேக்கரண்டி வெந்தயம்
½ தேக்கரண்டி பெருங்காயப் பொடி
¼ கறிவேப்பிலை
கூழ்:
1 மேஜை கரண்டி உளுந்து
1 மேஜை கரண்டி கடலை பருப்பு
1 மேஜை கரண்டி கொத்தமல்லி விதை
1 மேஜை கரண்டி மிளகு
1 தேக்கரண்டி கசகசா
5 கார வர மிளகாய்
½ கப் தேங்காய் துண்டுகள்
2 அங்குலம் இஞ்சி
4 பூண்டு
1 கப் தேங்காய் பால்
தேவையானஉப்பு
¼ கப் கொத்தமல்லி
செய்முறை:
ஒரு செக்லிஸ்ட் தயார் பண்ணிக் கொள்ளுங்கள். தேவையான பொருட்களை அருகிலேயே வைத்துகொள்ளுங்கள். எங்க நாட்டில் கருணை கிழங்கு துண்டுகள், ஃப்ரோஜென் (frozen)தான் கிடைக்கும்
தேவையான பொருட்களை அருகிலேயே வைத்துகொள்ளுங்கள். ஒரு கிண்ணத்தில் பயத்தம் பருப்போடு, கருணை கிழங்கு துண்டுகள், தக்காளி, புளி 4 கப் நீர் சேர்த்து குக்கரில் குழைய வேகவைக்க.கிழங்கு குக்கரில் வெந்துகொண்டிருக்கும் பொழுது கூழை தயார் பண்ணுங்கள். உளுந்து, கடலை பருப்பு, கொத்தமல்லி விதை, வர மிளகாய், வெந்தயம், மிளகு, கச கசா அனைத்தயும் மிதமான நெருப்பின் மேல் இருக்கும் வாணலியில் வறுத்துக் கொள்ளுங்கள், வாசனை வரும், பருப்பு பொன்னிறமாகும்.
வறுத்த பொருட்களை நீரில் ஊற வையுங்கள். தேங்காய் துண்டுகள், இஞ்சி பூண்டு, கூட சேர்த்து அறைத்து கொள்ளுங்கள். மிதமான நெருப்பின் மேல் ஒரு அடி கனமான பாத்திரத்தில் சூடான எண்ணையில் பெருஞ்சீரகம். கடுகு, பெருங்காயப் பொடி போட்டு தாளித்து கொள்ளுங்கள்..வெங்காயம், பச்சை மிளகாய் கறிவேப்பிலை மஞ்சள் சேர்த்து வதக்குங்கள் வேகவைத்த கிழங்கை குக்கரிலிறிந்து எடுத்து அதோடு சேர்த்து கிளற. கொதித்த பின் கூழ். தேங்காய் பால் சேர்த்து கிளற. உப்பு சேர்த்து ½ எலுமிச்சை பழத்தை பிழிந்து கிளருங்கள். மத்தால் நன்றாக மசியுங்கள். கொத்தமல்லி தூவி அலங்கரிக்க சுவையான சத்தான மணமான கார சாரமான மசியல் தயார்.பரிமாறுவதற்க்கு முன் சுவைத்து பாருங்கள்
சோறு, நெய்,, மசியல், வறுவல் நான்கும் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
