×

கள்ளக்குறிச்சி மாவட்டம், பிரிதிவிமங்கலம் கிராமத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி!!

சென்னை : கள்ளக்குறிச்சி மாவட்டம், பிரிதிவிமங்கலம் கிராமத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், “கள்ளக்குறிச்சி மாவட்டம் மற்றும் வட்டம், பிரிதிவிமங்கலம் கிராமத்தில் வசிக்கும் திரு.ராஜகோபால் (வயது 57) த/பெ.அய்யாக்கண்ணு என்பவர் நேற்று (28.12.2025) காலை சுமார் 9.00 மணியளவில் தனக்குச் சொந்தமான கிணற்றில் உள்ள விவசாய மின்மோட்டாரினை விவசாயத்திற்காக இயக்கும்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்த திரு.ராஜகோபால் அவர்களின் குடும்பத்தினருக்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Prithivimangalam ,Kallakurichi district ,Chennai ,Chief Minister ,M.K. Stalin ,Prithivimangalam village, ,Mr. ,Rajagopal ,Ayyakann… ,
× RELATED கோயில்களில் முதல் மரியாதை என்பது...