×

பயணிகளின் கூட்டநெரிசலை தவிர்க்க தாம்பரம்-ராமேஸ்வரம் இடையே சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: பயணிகளின் கூட்டநெரிசலை தவிர்க்கும் வகையில் தாம்பரம் – ராமேஸ்வரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை :
தாம்பரம் – ராமேஸ்வரம் இடையே ரயில் ( எண்-06017) முன்பதிவில்லா சிறப்பு ரயில் தாம்பரத்திலிருந்து நாளை இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.30 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும். அதேபோன்று மறுமார்க்கமாக ராமேஸ்வரத்திலிருந்து ரயில் (எண்-06018) 30ம் தேதி இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த ரயில் ெசங்கல்பட்டு, ேமல்மருவத்தூர், விழுப்புரம், விருதாச்சலம், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை வழியாக இயக்கப்படும். இவ்வாறு தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Thambaram ,Rameswaram ,Southern Railway ,Chennai ,Tambaram ,Rameshwaram ,
× RELATED தமிழ்நாட்டில் உள்ள நம் சகோதரிகள்...