- மாபி வேளாண் பல்கலைக்கழகம்
- ஜபல்பூர்
- விவசாய பல்கலைக்கழகம்
- ஜபல்பூர், மத்திய பிரதேசம்
- தில்வாரா
- துர்கா சங்கர்
ஜபல்பூர்: மத்தியப்பிரதேசத்தின் ஜபல்பூரில் அரசுக்கு சொந்தமான வேளாண் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகின்றது. தில்வாரா பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் காலியிடங்கள் குறித்த சமூக ஊடக தகவலை பார்த்து பல்கலைக்கழகத்திற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். அவரிடம் பேசிய மேல்நிலை எழுத்தர் துர்க்கா சங்கர் சிங்கர்ஹா பெண்ணை ஆவணங்களுடன் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் உள்ள பியூன் முகேஷ் சென் என்பவர் வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார்.
வீட்டிற்குள் சிங்கர்ஹா இருந்த நிலையில் அந்த பெண் உள்ளே சென்றுள்ளார். பியூன் வீட்டிற்கு வெளியே பூட்டிவிட்டுசென்றதாக தெரிகிறது. அந்த பெண்ணின் எதிர்ப்பையும் மீறி சிங்கர்ஹா அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின்பேரில் சிங்கர்ஹா மற்றும் முகேஷ் சென் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
