×

ஜனவரி 1 முதல் மேல்மருவத்தூரில் மேலும் 57 ரயில்கள் தற்காலிக நிறுத்தம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

நெல்லை: இருமுடி, தைப்பூசம் விழாவை முன்னிட்டு மேல்மருவத்தூரில் மேலும் 57 ரயில்களுக்கு ஜன.1 முதல் பிப்.2ம் தேதி வரை தற்காலிக ரயில் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. செங்கல்பட்டு அருகே மேல்மருவத்தூரில் இருமுடி, தைப்பூசம் விழாக்கள் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு விழாவை முன்னிட்டு அந்த வழியாகச்செல்லும் ரயில்கள் மேல்மருவத்தூரில் ஒரு நிமிடம் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்லும் வகையில் ஏற்கனவே தற்காலிக ரயில் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மேலும் 57 ரயில்களுக்கு ஜன.1ம் தேதி முதல் பிப்.2ம் தேதி வரை மேல்மருவத்தூரில் ஒரு நிமிடம் தற்காலிக நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, கன்னியாகுமரி – நிஜாமுதீன், நிஜாமுதீன் – கன்னியாகுமரி திருக்குறள் எக்ஸ்பிரஸ் எழும்பூர் – செங்கோட்டை, செங்கோட்டை -எழும்பூர் பொதிகை அதிவிரைவு ரயில் உள்பட 57 ரயில்கள் ஒரு நிமிடம் மேல்மருவத்தூரில் நின்று செல்லும். இவ்வாறு தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Tags : Melmaruvathur ,Southern Railway ,Nellai ,Irumudi ,Thaipusam ,Chengalpattu… ,
× RELATED நடப்பாண்டில் சென்னையில் 22,180 வீடுகள்...