×

ராஜஸ்தானில் தனியார் ஐ.டி. நிறுவன பெண் மேலாளர் கூட்டு பாலியல் வன்கொடுமை..!!

ஜெய்பூர்: பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் ஓடும் காரில் ஐடி நிறுவன பெண் மேலாளர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் உடைந்தையாக இருந்த பெண் அதிகாரி உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள தனியார் ஐடி நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ஜிதேஷ் சிசோடியா தமது பிறந்தநாளையொட்டி விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதில் அந்நிறுவனத்தின் பெண் மேலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விருந்து முடிந்து நள்ளிரவு ஒரு மணி அளவில் பெண் மேலாளர் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார்.

அப்போது அவரை வீட்டில் விடுவதாகக் கூறி ஜிதேஷ் சிசோடியா காரில் ஏற்றிக் கொண்டுள்ளார். அவருடன் பெண் உயர் அதிகாரியும் கணவர் கவுரவ் சரோஹியும் காரில் ஏறி கொண்டுள்ளார். வழியில் போதை பொருட்களை கொடுத்து அந்த பெண் மேலாளரை மயக்கம் அடைய செய்த இருவரும். ஓடும் காரிலையே பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக தெரிகிறது. அதிகாலை 5 மணியளவில் அந்த பெண்ணை வீட்டில் இறக்கிவிட்டுள்ளனர்.

மயக்கம் தெளிந்த பார்த்தபோது, உடலில் காயம் இருப்பதையும், அணிந்திருந்த நகைகள் காணாமல் போயிருப்பதையும் பார்த்த அந்த பெண், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மருத்துவ பரிசோதனையில் அந்த பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து ஜிதேஷ் சிசோடியா, கவுரவ் சரோஹி உடைந்தையாக இருந்த அவரது மனைவி உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags : Rajasthan ,Jaipur ,BJP ,
× RELATED 100 நாள் வேலை திட்டத்தை தகர்த்தது மூலம்...