பாட்னா: பீகார் மாநிலம் ரோட்டாஸ் மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ரோப் கார் தூண்களோடு இடிந்து விழுந்தது. சோதனை ஓட்டத்தின்போதே ரோப் கார் தூணோடு இடிந்து விழுந்ததால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். கடல் மட்டத்தில் இருந்து 1,400 அடி உயரத்தில் அமைந்துள்ளது ரோட்டாஸ் கோட்டை முக்கிய சுற்றுலா தலமாக விளங்குகிறது.
