புதுச்சேரி : புதுச்சேரியில் ரேஷன் கடைகளில் இலவசமாக ஒரு கிலோ கேழ்வரகு மாவு வழங்கப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். புதுச்சேரி ரேஷன் கடைகளில் தற்போது இலவச அரிசி, கோதுமை வழங்கப்படுவதாகவும் மக்கள் கோரிக்கைக்கு ஏற்ப இனி கேழ்வரகு மாவு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
