×

திருப்பரங்குன்றத்தில் உச்சிப்பிள்ளையார் கோயிலில்தான் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டுவருகிறது: ரவிக்குமார் எம்.பி.

சென்னை: திருப்பரங்குன்றத்தில் உச்சிப்பிள்ளையார் கோயிலில்தான் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருகிறது என விசிக எம்.பி. ரவிக்குமார் தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம் முருகன் கோயில் 4 ஸ்தானிக பட்டர்கள் வாக்குமூலத்தை உயர்நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும். காலம் காலமாக உச்சிபிள்ளையார் கோயிலில்தான் தீபம் ஏற்றப்பட்டு வருவதாக கோயிலின் 4 ஸ்தானிக பட்டர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்து அமைப்புகள் சர்ச்சை எழுப்பிய போது கோயில் நிர்வாகிகளுக்கு ஸ்தானிக பட்டர்கள் கடிதம் எழுதினர்.

உச்சிபிள்ளையார் கோயில் பின்புறம்தான் காலம் காலமாக தீபம் ஏற்றப்பட்டதாக தங்களது முன்னோர்கள் தெரிவித்தனர். தங்கள் நினைவு தெரிந்து ஒரு முறைகூட தர்கா அருகே தூணில் தீபம் ஏற்றப்பட்டதே இல்லை என முன்னோர்கள் தெரிவித்தனர். 1995லும் பாரம்பரிய முறைப்படி ஆகம சாஸ்திரத்தை கடைப்பிடித்து உச்சிப்பிள்ளையார் கோயில் அருகேதான் தீபம் ஏற்றப்பட்டது. கார்த்திகை தீபம் ஒருகாலத்திலும் இந்து முன்னணி கூறியதுபோல் தர்கா அருகே ஏற்றப்பட்டதில்லை என அப்போதைய அறங்காவலர்களுக்கே தெரியும் என தெரிவித்தார்.

Tags : Karthigai ,Uchipillaiyar temple ,Thiruparankundram ,Ravikumar ,Chennai ,Vishik MP ,Thiruparankundram Murugan temple ,Uchipillaiyar temple… ,
× RELATED வட மாநிலங்களில் கிறிஸ்தவர்கள் மீதான...