×

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் 101வது பிறந்தநாளை ஒட்டி முதலமைச்சர் வாழ்த்து!

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், விடுதலைப் போராட்ட வீரர் நல்லகண்ணுவின் 101வது பிறந்தநாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நல்லகண்ணுவின் பிறந்தநாளை ஒட்டி முதலமைச்சர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது; “விடுதலைப் போராட்ட வீரராகவும், விவசாயத் தொழிலாளர்களுக்கான போராளியாகவும் திகழ்ந்து, இன்றளவும் நமக்கு வழிகாட்டும் நூற்றாண்டு நாயகர், இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் முதுபெரும் தலைவர் ஐயா நல்லகண்ணு அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!

தன்னலம் கருதா உழைப்புக்கு வாழும் சாட்சியான, எண்ணற்ற இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டான தாங்கள் – நல்ல உடல்நலத்துடன் நீண்டநாட்கள் நிறைவாழ்வு வாழ்ந்திட விழைகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

Tags : Chief Minister ,Nallakanu ,Communist Party of India ,Chennai ,Chief Minister of India ,CPC ,Nalalkanu ,K. Stalin ,
× RELATED ஒவ்வொரு முறை டெல்லிக்கு செல்லும்...