அமராவதி: ஆந்திராவின் நந்தியாலா மாவட்டத்தில் பேருந்து மீது கார் மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர். திருப்பதியில் இருந்து ஹைதராபாத் சென்ற குவாலிஸ் கார், கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பைக் கடந்து எதிர் திசையில் வந்த தனியார் பேருந்து மீது வேகமாக மோதி நொறுங்கியுள்ளது.
